இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, கடந்த 2022-ம் ஆண்டு ஓய்வு பெற்றபின், புதிய தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். டி.கே.எஸ். தயாரிப்பில் சரவணக்குமார் தயாரிக்கும் இப்படத்தை லோகன் இயக்குகிறார். இசை சந்தோஷ் சிவன் வழங்கி, ஒளிப்பதிவு சந்திப்.கே.விஜய் செய்தார்.படத்தில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைப்பெறும் நிலையில், விரைவில் தலைப்பு அறிவிப்பு மற்றும் நடிகர், நடிகைகள் அறிமுக விழா நடைபெற உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியையும் அழைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.தோனி, முன்பு தயாரிப்பாளராக தமிழில் எல்.ஜி.எம். படத்தை தயாரித்திருந்தார். இப்போது சின்ன தல ரெய்னாவை நடிகராக அறிமுகப்படுத்தியதற்காக தோனி சென்னைக்கு வர உள்ளார்.