Offline
Menu
Brics Summit: பிரதமர் அன்வார் வியட்நாமின் பிரதமர் சந்திப்பு
By Administrator
Published on 07/08/2025 09:00
News

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று வியட்நாம் பிரதமர் பாம் மின் சீனுவை சந்தித்தார். இவர்கள் இருவரும் பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரான ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் இரண்டு நாள் Brics உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதமர் அன்வாருடன், போக்குவரத்து அமைச்சர்,மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர், மலேசிய வெளிவிவகார அமைச்சகத்தின் இரு நாடுகளின் உறவுகள் தொடர்பான துணை பொதுசெயலாளர் ஆகியோரும் கூட இருந்தனர்.

கடந்த மே மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற 46வது ஆசியான் உச்சிமாநாட்டிலும் வியட்நாம் பிரதமர் சீனுடன் இரு நாடுகளில் உறவுகள் வலுவுப்படுத்தல் குறித்து பேசியுள்ளார்.

வியட்நாமை பொறுத்தவரை மலேசியா ஆசியாவில் தனது மூன்றாவது பெரிய வர்த்தக நாடாகவும், உலகளவில் ஒன்பதாவது பெரிய வர்த்தக நாடாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்ச்சியாக வளர்ந்துள்ளது; 2024-ல் இது 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்ந்துள்ளது, மேலும் 2025 ஆம் ஆண்டுக்கான இலக்கு 18 பில்லியன் அமெரிக்க டாலர் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments