Offline
Menu
அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து- பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு
By Administrator
Published on 07/08/2025 09:00
News

பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

கராச்சியில் உள்ள லியாரி பாக்தாதி என்ற இடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.கட்டிட இடிபாட்டிற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், 8 பேர் காயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது.

மேலும், இன்னும் ஏராளமானோர் கட்டிட இடிபாட்டில் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதன்படி, விபத்தில் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளர்வர்களை் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.

Comments