Offline
Menu
தாய்லாந்தில் நான்கு வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம்
By Administrator
Published on 07/08/2025 09:00
News

தாய்லாந்தில் நான்கு வயது இரட்டை குழந்தைகளுக்கு திருமணம் நடத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தாய்லாந்தின் கலாசின் மாநிலத்திலுள்ள ப்ரச்சயா ரிசார்டில் (Prachaya Resort) இந்த திருமணம் நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

தட்சனப்போர்ன் சோர்ன்சாய் மற்றும் தட்சதோர்ன் என்ற இரட்டையர்களுக்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றும் புத்த துறவிகள் கலந்து கொண்டு ஆசிர்வதிப்பதும், சிறுமி தன் இரட்டையர் சகோதரரின் கன்னத்தில் முத்தமிட்டு, சடங்குகளைச் செய்து முடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. திருமணத்தின் போது குடும்பம் நான்கு மில்லியன் பாத் பணம் மற்றும் தங்கம் வரதட்சணையாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த காணொளிக்கு பல்லாயிரக்கணக்கான நேர் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்தன. சிலர் இதனை ஒரு கலாசார மரபாக ஏற்றுக்கொண்டனர். சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தாய்லாந்து மக்களின் நம்பிக்கையின்படி, இதுபோன்ற பெண்-ஆண் இரட்டையர்கள் கடந்த ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் என்றும், அவர்கள் இந்த ஜென்மத்தில் இரட்டையர்களாக பிறந்ததால், எதிர்காலத்தில் ஏற்படும் துன்பங்கள், நோய்கள் போன்ற கெட்ட விஷயங்களை தவிர்க்க இந்த சடங்கு நடத்தப்படுவதாக நம்பப்படுகிறது.

எனினும் இந்த திருமணம் சட்டபூர்வமாக செல்லுபடியாகாது என்பதும், இது வெறும் சடங்காக மட்டுமே நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments