சபா மாநிலம் தம்பருலி, கம்போங் தெங்கிலான் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், கழுத்து, தலை மற்றும் இரு கண்களிலும் பலத்த காயங்களுடன் 41 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
“சம்பவம் நடந்த அதே நாளில், 47 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மற்றும் உயிரிழந்த பெண் இருவரும் உள்ளூர்வாசிகள்,” என Tuaran மாவட்ட போலீஸ் தலைவர் நோரைடின் அக்மட் மைடின் தெரிவித்தார்.
“கைது செய்யப்பட்ட நபர் மனநல பிரச்சனைக்கு உட்பட்டவர் என நம்பப்படுகிறது. அவர் முன்பு மருத்துவமனையில் தொடர்ச்சியான சிகிச்சையும் பெற்றுள்ளார். இதுவரை கொலைக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கொலை வழக்கு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) கீழ் விசாரணை செய்யப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரணதண்டனை அல்லது குறைந்தது 30 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி ஆகியவை விதிக்கப்படலாம்.
இந்த சம்பவம் தொடர்பாகத் தகவல்கள் இருப்பின், பொதுமக்கள் போலீஸ் hotline 088-794313 அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்