அலோர் காஜா, மலாகாவில் 15 மாத பெண் குழந்தை தனது தாயாராலும், தாயின் காதலனாலும் துன்புருத்தி கொல்லப்பட்டார்.
குழந்தை சுயநினைவு அற்ற நிலையில் , 24 வயதுடைய தாய், இரவு 11 மணியளவில் தம்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். சிகிச்சைக்காக பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் வயிறு, முதுகு பகுதியில் காயங்கள் மற்றும் அச்சுறுத்தும் அடையாளங்களை கண்டுபிடித்தர்.
மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர். குழந்தையின் உடல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
மலாகா மாநில குற்றப்புலனாய்வுத் துறைத் தலைவர் லியோ கியான் ஹியோங், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் வந்ததை உறுதிபடுத்தினார். கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட தாய் மற்றும் காதலன் இன்று காலை அலோர் காஜா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதாக அவர் கூறினார்.