Offline
கடையை திறந்து வைத்த கீர்த்தி சுரேஷ்: TVK… TVK… என கத்திய ரசிகர்கள்
By Administrator
Published on 07/08/2025 09:00
Entertainment

கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக உப்பு கப்புரம்பு என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நேரடி ஓடிடி ரிலீஸாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சுகாஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மொபைல் கடை திறப்பு விழாவில் கீர்த்தி சுரேஷ் கலந்துக் கொண்டார். இவரை பார்க்க ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

அப்போது திறப்பு விழாவில் கீர்த்தி பேசும் போது “அன்பு காட்டும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி, மேலும் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே அங்கு இருந்த ரசிகர்கள் TVK.. TVk….TVK… என்ற கோஷங்களை எழுப்பத்தொடங்கினர். இதற்கு கீர்த்தி சுரேஷ் கையில் ஹார்ட் சின்னத்தை காட்டினார். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Comments