விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ஆனந்த், தனது பெயருக்கு முன்னே வரும் மாகாபா என்ற சொல்லின் அர்த்தத்தை சமீபத்தில் விளக்கியுள்ளார்.
மிர்ச்சி எஃப்எம் காலத்தில், நடிகர் மிர்ச்சி செந்தில் அவருக்கு இந்த பெயரை சூட்டியதாக கூறிய ஆனந்த், Maa Ka Paa என்ற ஹிந்தி சொற்கள் இணைந்து அம்மாவுக்கு அப்பா என்ற அர்த்தம் கொண்டது என தெரிவித்துள்ளார். RJ-களுக்கு தனி அடையாளம் வேண்டும் என்பதால் இந்த பெயர் வைத்ததாகவும், அது இன்றுவரை பிராண்டாக மாறியுள்ளதாகவும் ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.