உலக அழகி மற்றும் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய் மீது மகளின் நல்லெண்ண வளர்ச்சிக்கு காரணம் என்று நடிகர் அபிஷேக் பச்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
சமூக ஊடகங்களில் ஆராத்யா பச்சன் இல்லாததைக் குறித்து பேசிய அபிஷேக், “அவளிடம் தொலைபேசியோ, சமூக ஊடகங்களோ எதுவும் இல்லை. இதற்கான முழு காரணமும் என் மனைவி ஐஸ்வர்யா ராய்க்கே சேர்ந்தது. ஆராத்யா எங்கள் குடும்பத்தின் பெருமையும் மகிழ்ச்சியும். நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என கூறியுள்ளார்.