தமிழ் சினிமாவில் தனி அடையாளம் கொண்ட இயக்குநர் ஹெச். வினோத் தற்போது விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் பணியாற்றி வருகிறார். இப்படம் குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில், வினோத் அடுத்ததாக தனுஷுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துணிவு முடித்தபின் தனுஷிடம் ஒரு கதை சொல்லி ஒப்புதல் பெற்ற வினோத், தற்போது விஜய் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் அந்தப் படம் தாமதமாகியுள்ளது. ஜனநாயகன் முடிந்ததும் தனுஷ் படம் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.