நிதேஷ் டிவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணா படத்தில் ராமராக ரன்வீர் கபூர், சீதாவாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் நடித்துவருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹன்ஸ் ஜிம்மர் இசையமைக்கும் இந்த படம் ரூ.1600 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
2026 தீபாவளியில் முதல் பாகமும், 2027 தீபாவளியில் இரண்டாம் பாகமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் வட்டார தகவல்படி, ராமர் கதாபாத்திரத்திற்கு ரன்வீர் கபூர் ரூ.150 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும், சீதா கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவி ரூ.12 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்படவில்லை.