2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்கு தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, நூற்றுக்கணக்கானோர் பணயமாகக் கொள்ளப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் காசாவுக்கு எதிராக போர் தொடங்கியது. கடந்த 21 மாதங்களில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க காசா மனிதாபிமான அறக்கட்டளை பொறுப்பேற்றுள்ளது. நாள்தோறும் ஐந்து லாரிகளில் உதவி பொருட்கள் அனுப்பப்படுகின்றன.இந்தநிலையில், நுசைரத் அகதிகள் முகாமில் உள்ள தண்ணீர் விநியோக நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் உயிரிழந்தனர். இது தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதென இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.