கேரளாவின் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் ஆண்டுதோறும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், பாலக்காடு மாவட்டம் குமரமபுத்தூரைச் சேர்ந்த 58 வயது நபர் காய்ச்சலால் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் உயிரிழந்தார். பரிசோதனையில் நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாதிரிகள் புனே வைராலஜி ஆய்வகத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளன.இதையடுத்து, அவரது வீட்டை சுற்றியுள்ள 3 கி.மீ. பகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, மக்கள் நகர்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது.இறந்த நபருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மேலும், நிபா அறிகுறிகளுடன் உள்ள இன்னொரு நபர் கோழிக்கோடு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.