ஜூன் 12 அன்று அஹமதாபாதில் இருந்து புறப்பட்டதும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்திய விமான விபத்துப் புலனாய்வு அமைப்பின் ஆரம்ப கட்ட அறிக்கையில், விமானத்தின் எஞ்சின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்கள் முடக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இது யாரால் நிகழ்ந்தது என்பது உறுதியாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை.விபத்துக்குப் பிறகு சில விமானவியல் நிபுணர்கள், இது விமானிகளின் உள்நோக்கிய அல்லது தவறான செயற்பாட்டால் நடந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய வர்த்தக விமானிகள் சங்கம் (ICPA), இது நிரூபணமில்லாத ஊகக்கதையாகவும், விமானி தற்கொலை என கூறுவதை நிராகரிக்கவேண்டிய தீவிரமான மற்றும் செவிமடுக்க முடியாத குற்றச்சாட்டாகவும் விமர்சித்தது.இதேபோல், ஏர்லைன் பைலட்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ALPA India) இந்த விசாரணை முறையாக நடைபெவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளது. "விசாரணை விமானிகள் மீது குற்றத்தை சுமத்தும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது" என தெரிவித்த அவர்கள், தங்களை ஆய்வில் பார்வையாளர்களாக சேர்க்க AAIB-யிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த விபத்தில், 242 பயணிகளில் ஒருவர் மட்டுமே உயிர்தப்ப, 19 பேர் தரையிலும் உயிரிழந்தனர்.