அமெரிக்க அனுமதியுடன் NVIDIA தனது H20 செயற்கை நுண்ணறிவு சிப்களை சீனாவிற்கு மீண்டும் விற்பனை செய்யத் தயாராக உள்ளது. உயர் தொழில்நுட்ப சிப்கள் அனுப்ப தடை இருந்ததால், சீனாவுக்கே ஏற்ப H20 எனும் சிப்கள் உருவாக்கப்பட்டன.டிரம்ப் கால அனுமதி கட்டுப்பாடுகள் காரணமாக விற்பனை தடைபட்ட நிலையில், தற்போது அமெரிக்க அரசு அனுமதி வழங்குவதாக உறுதி அளித்துள்ளது.NVIDIA CEO ஜென்சன் ஹுவாங், H20 சிப்கள் சீனாவிற்கு விரைவில் அனுப்பப்படும் என தெரிவித்தார். அவர் ஜூலை 16ல் நடைபெறும் சீனா சர்வதேச விநியோக சங்க மாநாட்டிலும் பங்கேற்கிறார்.சீன சந்தை NVIDIAக்கு முக்கியமானதாக இருந்தாலும், அமெரிக்க தடைகள் காரணமாக உள்ளூர் போட்டி அதிகரித்துள்ளது. சீனாவின் பொருளாதாரம் இரண்டாம் காலாண்டில் 5.2% வளர்ச்சி கண்டுள்ளது.