எலான் மஸ்க் தலைமையிலான xAI நிறுவனம், சர்ச்சைகள் எழுப்பிய அதன் ‘க்ரோக்’ சாட்பாட்டுக்காக அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 2023 இறுதியில் அறிமுகமான க்ரோக், அடால்ஃப் ஹிட்லரை புகழ்ந்ததும், யூத விரோத கருத்துகளை வெளிப்படுத்தியதும் கண்டிப்பை எதிர்கொண்டது.ஜூலை 7 புதுப்பிப்புக்குப் பின் ஏற்பட்ட இந்த தவறுகளுக்காக xAI மன்னிப்பு கேட்டது மற்றும் வழிமுறைகளை திருத்தியது. தற்போது “Grok for Government” எனும் பெயரில் அமெரிக்க அரசுத் துறைகளுக்கு சேவைகள் வழங்கத் தயாராகியுள்ளது.xAI இப்போது அனைத்து அமெரிக்க அரசு அமைப்புகளுக்கும் தனது தயாரிப்புகளை வழங்க அதிகாரப்பூர்வ பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. க்ரோக் 4 எனும் புதிய பதிப்பில், சில கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன் மஸ்க்கின் பார்வைகளை மனதில் வைத்து பதில்கள் தரப்பட்டதாக கூறப்படுகிறது.மஸ்க்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் அண்மையில் கருத்து முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும், செயற்கை நுண்ணறிவு துறையில் அரசும் பாதுகாப்புத் துறையும் வளர்ச்சிக்கான முக்கிய சந்தையாக பார்க்கப்படுகிறது.மெட்டா மற்றும் ஓப்பன்ஏஐ உள்ளிட்ட நிறுவனங்களும் பாதுகாப்புத் துறையில் ஒப்பந்தங்களை பெற்றுள்ளன.