வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் KM316.9 பகுதியில் நேற்று இரவு நடந்த விபத்தில், 41 வயதான இரு சீன பிரஜைகள் உயிரிழந்தனர். டொயோட்டா வியோஸ் காரை ஓட்டிய 56 வயது உள்ளூர் நபர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். கோலாலம்பூரில் இருந்து பினாங்கு நோக்கி சென்ற வாகனம், லோறியை தவிர்க்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என போலீசார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பான தகவல் இரவு 8.53 மணிக்கு பெறப்பட்டதாகவும், வாகனத்தில் சிக்கியவர்களை மீட்க சிறப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தீயணைப்பு துறை தெரிவித்தது. உயிரிழந்தவர்கள் தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சாலை போக்குவரத்து சட்டம் 1987ன் பிரிவு 41(1) கீழ் விசாரிக்கப்படுகிறது.