மாஸ்கோ,ரஷியாவில் 50 பேர் பயணம் செய்த ஏ.என்.-24 பயணிகள் விமானம் மாயகியுள்ளது. சைபீரியாவை சேர்ந்த அங்காரா விமான நிறுவனத்தால் இயக்கப்படும் விமானம் – சீனாவின் எல்லையையொட்டிய ரஷியாவின் அமுர் பிராந்தியத்தில் உள்ள டின்டா என்ற பகுதிக்கு மேலே பறந்தபோது விமானம் ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.
பயணிகள் விமானத்துடன் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மாயமான விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள அமுர் என்ற இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த 50 பேரின் கதி என்ன? என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.