Offline
Menu
தகுந்த காரணமின்றி நாட்டுக்குள் நுழைய முயற்சி – 198 அந்நிய நாட்டவர்கள் KLIA-வில் கைது
By Administrator
Published on 07/26/2025 09:00
News

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் (KLIA) முதலாம் மற்றும் இரண்டாம் முனையங்களில் நேற்று நடத்தப்பட்ட ஒட்டுமொத்த அதிரடிச் சோதனையின் போது, 198 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பயணிகள், சரியான காரணமின்றி நாட்டிற்குள் நுழைய முயன்றது, போதுமான பணம் கைவசம் இல்லாதது, மற்றும் மலேசியாவில் தங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளாதது உள்ளிட்ட காரணங்களால் தடுத்து வைக்கப்பட்டதாக, எல்லைக் கட்டுப்பாட்டு மற்றும் பாதுகாப்பு சேவைகள் (AKBS) நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுஹைலி முகமது ஜைன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளின் கண்காணிப்பில், சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 200 வெளிநாட்டவர்கள் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் தங்களது சொந்த நாட்டிற்கு மீண்டும் அனுப்பப்பட உள்ளனர். இது, “Note To Land” (NTL) நடைமுறை வழியாக மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Comments