கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.காந்தர் என்ற ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஆகஸ்ட் 3 ஆம் தேதி இரவு தனது வீட்டில் அறுந்த guitar string இல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
காந்தரின் தந்தை ஒரு இசைக் கலைஞர் ஆவார். அவரது தாயார் சவிதா ஒரு நாட்டுப்புறப் பாடகி. சம்பவம் நடந்தபோது சவிதா நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார்.
தற்கொலைக் குறிப்பில், காந்தர், “அம்மா, அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள், நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்.
ஆனால் இன்று நான் வெளியேற வேண்டிய நேரம் இது. நீங்கள் என் கடிதத்தைப் படிக்கும் நேரத்தில், நான் சொர்க்கத்தில் இருப்பேன்” என்று தற்கொலைக் குறிப்பில் எழுதிவைத்தான்.
சிறுவனின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அந்தச் சிறுவன் பிரபலமான ஜப்பானிய Anime தொடரான ‘Death Note’ தொடரை மிகவும் விரும்பி, இந்த நிகழ்ச்சியின் ஒரு கதாபாத்திரத்தின் படத்தை தனது அறையில் வரைந்திருப்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த தொடரின் தாக்கம் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
டெத் நோட் கதையில், ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கு நரகத்திலிருந்து தவறுதலாக பூமியில் விழுந்த குறிப்பேடு கிடைக்கிறது. ஒருவரின் பெயரை மனதில் நினைத்துக்கொண்டு அதில் எழுதினால் அவர்கள் மரணிப்பார்கள்.