ஜோகூர் பாரு,
மலேசியாவின் சுகாதார துறையில், குறிப்பாக ஜோகூரில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை சமாளிக்க, இந்தோனேசியாவுடன் மூலோபாய ஒத்துழைப்பை ஏற்படுத்தும் யோசனையை ஜோகூர் மாநில அரசு வரவேற்றுள்ளது.
இந்த நடவடிக்கை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள பிரச்சனையைத் தீர்க்க உதவும். இருப்பினும், வெளிநாட்டு தாதியர்களை நியமிப்பதற்கான தெளிவான நடைமுறைச் செயல்முறை (SOP) அமைச்சகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளால் தயாரிக்கப்பட வேண்டும் என ஜோகூர் மாநில சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குழு தலைவர் லிங் தியான் சூன் தெரிவித்ததாவது, என்றார்.
இந்தோனேசியா தூதரகம் சமீபத்தில் முன்வைத்த இந்த யோசனை, மலேசியாவில் பணியாளர்கள் பற்றாக்குறையையும், இந்தோனேசியாவில் அதிக பணியாளர்கள் இருப்பதையும் கருத்தில் கொண்டு, இரு நாடுகளுக்கும் “வின்-வின்” நிலையை உருவாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது ஜோகூர் பாருவில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில், ஒரே ஒரு தாதி ஒரு பணிப் பருவத்தில் 10 முதல் 14 நோயாளர்கள் வரை கவனித்து வருகிறார்; இதற்கான சிறந்த விகிதம் 1:6 அல்லது அதிகபட்சம் 1:8 என முதல்வர் Datuk Onn Hafiz Ghazi தெரிவித்தார்.