மச்சாங்,
13 வயது மாணவி சாரா கைரீனா மஹாதீர் மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க, அவரது உடலை விரைவில் தோண்டி எடுத்து மறுமருத்துவ பரிசோதனை (Post-mortem) செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ சைஃபுடீன் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
நேற்று சட்டத்துறை தலைவர் (AGC) வழங்கிய உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டர்-ஜெனரல் ஆஃப் போலீசின் விளக்கத்தின் படி, இந்த செயல்முறை உடனடியாக தொடங்கப்படும் என்றார் அவர்.
“விசாரணையைப் புதுப்பித்து, அனைத்து ஆதாரங்களையும் சேகரிப்பதில் போலீசார் கவனம் செலுத்துவார்கள். நீதியின் கோட்பாட்டில் எந்த சமரசமும் செய்யாமல், மறைந்த சாரா கைரீனாவின் குடும்பம் மற்றும் பள்ளியைப் பொறுத்து அனைவருக்கும் நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
சாரா கைரீனா, ஜூலை 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் சபாவின் பாப்பார் பகுதியில் உள்ள ஒரு மத பள்ளி விடுதியின் அருகிலுள்ள வடிகாலில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அடுத்து, கோத்த கினபாலுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஜூலை 17 அன்று மரணம் அடைந்தார்.