தோக்கியோ
ஜப்பானில் நடந்த குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற இரண்டு இலகு எடை வீரர்கள் சிகேடோஷி கொட்டாரி மற்றும் ஹிரோமஸா உராக்காவா மூளையில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்தனர்.
ஆகஸ்ட் 2-ம் தேதி தோக்கியோவின் கொராகுவென் மண்டபத்தில் நடைபெற்ற ஒரே போட்டியில் கலந்துகொண்ட வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டிருந்தாலும், அவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொட்டாரி, 12 சுற்றுகள் போட்டியில் நினைவிழந்து இறந்தார் என்றும், உராக்காவா 8-வது சுற்றில் வீழ்ந்தபின் மூளை காயம் காரணமாக சனிக்கிழமை இரவு உயிரிழந்தார் என்று உலக குத்துச்சண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
இது ஜப்பானிய குத்துச்சண்டை வரலாற்றில் ஒரே போட்டியில் மூளை அறுவை சிகிச்சை தேவையான முதல் நிகழ்வாகும் என்று நிரந்தர செயலாளர் சுயோஷி யாசுகோஷி கூறினார்.