Offline
Menu
பாலஸ்தீனத்தின் பீலே.. காசாவில் உணவுக்காக காத்திருந்த கால்பந்து வீரர் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு
By Administrator
Published on 08/11/2025 08:00
News

பிரேசில் நாட்டை சேர்ந்த உலக கால்பந்து ஜாம்பவான் பீலே. இந்நிலையில் ‘பாலஸ்தீன கால்பந்தின் பீலே’ என்று அழைக்கப்படும் சுலைமான் அல்-உபைத் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார்.

பாலஸ்தீன தேசிய அணிக்காகவும், காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள அணிகளுக்காகவும் சுலைமான் விளையாடி உள்ளார்.

தற்போது 41 வயதான சுலைமான் அல்-உபைத், கடந்த ஆகஸ்ட் 6 அன்று, காசாவில் உள்ள ஒரு உதவி விநியோக மையத்தில் உணவுக்காக தனது குழந்தைகளுடன் வரிசையில் நின்றபோது இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டார்.

1984 இல் பிறந்த சுலைமான் காசாவில் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவராக இருந்தார். 2007 முதல் 2023 வரை நீடித்த தனது கால்பந்து வாழ்க்கையில் பல்வேறு அணிகளுக்காக 100க்கும் மேற்பட்ட கோல்களை அடித்தார்.

2010 மேற்கு ஆசிய சாம்பியன்ஷிப்பில் ஏமனுக்கு எதிராக அவர் அடித்த சிசர்-கட் கோல் குறிப்பிடத்தக்கது.சுலைமான் அல்-ஒபெய்டின் மரணத்துடன், காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட கால்பந்து வீரர்களின் எண்ணிக்கை 220 ஐ எட்டியுள்ளது.காசாவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 662 ஆக உயர்ந்துள்ளது.

விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், நடுவர்கள் மற்றும் கிளப் வாரிய உறுப்பினர்கள் உட்பட கால்பந்து தொடர்பானவர்களின் இறப்புகளின் எண்ணிக்கை 321 ஐ எட்டியுள்ளது.

Comments