கோலதிரெங்கானு,
தந்தை மற்றும் வளர்ப்பு தாயால் அடித்துக் கொல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வயது 11 மாத சிறுவனின் மரணத்தைத் தொடர்ந்து, போலீசார் கணவன்-மனைவியாரான அந்த தம்பதியரை கைது செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி பிற்பகல் 4.14 மணியளவில் சுல்தானா நூர் சாஹிரா மருத்துவமனையிலிருந்து சிறுவனின் மரணத்தைப் பற்றிய தகவல் கிடைத்தது என கோலதிரெங்கானு, போலீஸ் தலைவர் ஏ.சி.பி. அஸ்லி மொஹட் நூர் தெரிவித்தார்.
இரண்டு சகோதரர்களில் இளையவரான அந்த சிறுவனை, ஆகஸ்ட் 6 அன்று மதியம் 1 மணியளவில் மயக்கநிலையுடன் மருத்துவமனைக்கு தந்தை மற்றும் மாமியார் கொண்டு வந்தனர்.
சந்தேகநபர்கள், சிறுவன் விழுந்ததால் நெற்றி வீக்கம் ஏற்பட்டதாகவும், தந்தை ஐஸ்கட்டி வைத்ததால் வீக்கம் குறைந்ததும், அவன் வழக்கம்போல விளையாடியதாகவும் கூறியுள்ளனர்.
ஆனால் மறுநாள் மதியம் சிறுவன் பலவீனமாகவும், உடல் தளர்ந்தும் இருந்ததாகவும், fits வராமல் தடுக்க சிறுவனின் கழுத்தை மசாஜ் செய்ததாகவும், அதனால் கழுத்தில் அடிப்பட்ட காயம் ஏற்பட்டதாகவும் தந்தை கூறினார்.
பின்னர் அவர்கள் மணிர் சுகாதார நிலையத்திற்கு சிறுவனை கொண்டு சென்றனர். அங்கிருந்து அவன் மோசமான நிலையில் இருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான் எனவும் ஒரு கதையை கூறினர் என்றார் அவர்.
மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு மூளை காயம், அடிபட்ட காயங்கள் மற்றும் குத்தும் காயங்கள் இருந்தன.
சிறுவன் ஆகஸ்ட் 7 அன்று பிற்பகல் 2.05 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், கடுமையான அடிதாக்கத்தால் ஏற்பட்ட மூளைக்குள் இரத்தப்போக்கு (intracranial haemorrhage) தான் மரணக் காரணம் என தெரியவந்தது. விசாரணையில், சந்தேகநபர்கள் சிறுவனை clothes hanger கொண்டு அடித்ததாக ஒப்புக்கொண்டனர்.