புத்ராஜெயா ஏரியில் இருந்து இன்று காலை 17 வயது சிறுவனின் உடல் மிதந்து கண்டெடுக்கப்பட்டது. காலை 7.50 மணிக்கு பொதுமக்களால் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமது தெரிவித்தார்.
அந்தப் பகுதியை கடந்து சென்ற ஒரு சாட்சி நீந்தி உடலை கரைக்கு இழுத்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஆரம்ப விசாரணையில் எந்த குற்றச் செயல்களும் இல்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.உடல் பிரேத பரிசோதனைக்காக புத்ராஜெயா மருத்துவமனை நோயியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.