லாகூர்,இந்தியாவின் காஷ்மீர் யூனியன் பிரதேசம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூண்ட நிலையில் இரு நாடுகளும் வான்பரப்பை மூடின.
இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை பாகிஸ்தான் மூடியதால் விமானங்கள் மாற்று பாதையில் பயணித்தன. இதனால், விமான பயணம் நேரம் அதிகரித்துள்ளது. அதேவேளை, இந்தியா செல்லும் விமானங்கள் பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த விமான நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இது பாகிஸ்தான் அரசுக்கு வருவாயாக பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 2 மாதங்களாக இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை மூடியதால் பாகிஸ்தான் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது.
இந்நிலையில், இந்திய விமானங்களுக்கு வான்பரப்பை மூடியதால் பாகிஸ்தான் கடந்த 2 மாதங்களில் 126 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.