திரெங்கானுவின் செத்தியு, சுங்கை டோங்கில் உள்ள கம்போங் லங்காப் பாருவில் தனது இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் ஒரு முதியவர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டார். 79 வயதான அந்த நபர் இன்று அதிகாலை 4.10 மணியளவில் கோல திரெங்கானுவில் உள்ள சாபாங் டிகா காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
திறந்திருந்த ஜன்னல் வழியாக வீட்டிற்குள் தீப்பிடிக்க கூடிய கருவியை வீசியதாக நம்பப்படுவதாக செத்தியு காவல்துறைத் தலைவர் ஜைன் மாட் டிரிஸ் தெரிவித்தார். சந்தேக நபர் சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதியை விட்டு வெளியேறினார். சம்பவம் அதிகாலை 1 மணிக்கு நடந்ததாக நம்பப்படுகிறது, என்று அவர் கூறினார். அந்த நபரின் வளர்ப்பு மகன் காவல்துறையில் புகார் அளித்ததாக ஜைன் கூறினார்.