கோலாலம்பூர்,
பேரரசர் சுல்தான் இப்ராஹிம், ரஷ்யாவுக்கு மேற்கொண்ட 5 நாள் விஜயத்தை நிறைவு செய்து இன்று பாதுகாப்பாக நாடு திரும்பினார்.
அவரது தனியார் விமானம் இன்று காலை 6.30 மணிக்கு ஜோகூர் மாநில செனை சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
பேரரசரை வரவேற்க, ஜோகூர் அரசின் இளவரசர் துங்கு மகோத்தா இஸ்மாயில், மற்றும் பலர் நேரில் இருந்தனர். பேரரசர் நேற்று காலை 11.08 மணிக்கு கசான் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார்.
2024 ஜனவரி 31 அன்று மலேசியாவின் மன்னராகப் பதவியேற்ற சுல்தான் இப்ராஹிம் , ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் 5 அன்று தனது முதல் ரஷ்யா பயணத்தை மேற்கொண்டார்.
மலேசியா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கிடையே 1967 ஆம் ஆண்டில் தூதரக உறவுகள் தொடங்கியதிலிருந்து, ரஷ்யாவுக்கு மலேசிய மன்னர் ஒருவர் மேற்கொண்ட இது முதலாவது மாநில விஜயமாகும்.
சிங்கப்பூர், சீனா மற்றும் புருனை ஆகிய நாடுகளுக்குப் பிறகு, இது சுல்தான் இப்ராஹிம் நான்காவது மாநில விஜயமாகும்.