ஈப்போ
நேற்றிரவு 13 இடங்களில் ஒரேநேரத்தில் மேற்கொண்ட சோதனையில் 54 வெளிநாட்டு பெண்களை கைது செய்தனர்.
அதில் தாம்புன் பகுதியில் உள்ள ஒரு massage parlourரில் சிறப்பு சோதனை நடத்தியதில் பெரும்பாலானவர்கள் சமூக பயண அனுமதியில் வந்து, சட்டவிரோதமாக வேலை செய்ததால் கைது செய்யப்பட்டதாக மலேசியா குடிநுழைவுத்துறை துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைதானவரில் ஒரு 25 வயது தாய்லாந்து பெண், வேகமாக வருமானம் ஈட்டவே இந்த தொழிலில் ஈடுபட்டதா க வும், மசாஜ் செய்ய வருபவர்களிடம் 50 ரிங்கிட் முதல் 110 ரிங்கிட் வரை தாம் பெற்றதாகவும் தெரிவித்தார்.
இந்த சமபவத்தில் 48 தாய்லாந்து, 2 இந்தோனேசிய மற்றும் 4 வியட்நாமியர்களும் கைதுசெய்யப்ப்பட்டு விசாரணைக்கு உட்பட்டுள்ளனர்.
இந்த சோதனை 14 நாட்கள் கண்காணிப்புக்குப் பிறகு நடைபெற்றது என்றும், இது தவறான செயல்களில் ஈடுபடுவோருக்கான தடுப்பு நடவடிக்கை என்றும் குடிநுழைவுத்துறை இயக்குநர் டேடுக் ஜேம்ஸ் லீ, தெரிவித்தார்.