கோலாலம்பூர்,
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசிய குடிமக்களுக்கு “Bantuan Sara” திட்டத்தின் மூலம் RM100 வழங்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாக அறிவித்திருந்தார்.
நிதி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்த உதவித் தொகைக்காக எந்தவொரு முன் விண்ணப்பமும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள், தங்களது தேசிய அடையாள அட்டையின் (MyKad) அடிப்படையில் தானாகவே இந்த தொகையைப் பெறுவார்கள்.
மேலும், சமூக ஊடகங்களில் பரவும் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்களுக்கு பொதுமக்கள் எளிதில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றும், மோசடியில் சிக்காமல் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சு எச்சரித்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு, பொதுமக்கள் நிதி அமைச்சின் அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மற்றும் சேனல்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.