Offline
Menu
ஐ.நா. கூட்டத்தில் பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிக்கவிருக்கும் ஆஸ்திரேலியா
By Administrator
Published on 08/13/2025 09:00
News

கான்பெரா,

வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது என்று பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்தார்.

ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவும், பொதுத் தேர்தலை நடத்தவும், மேலும் வட்டாரத்தில் நிலைத்திருக்க இஸ்ரேலின் உரிமையை அங்கீகரிக்கவும் பாலஸ்தீன ஆணையம் உறுதி அளித்துள்ளதாக அவர் கூறினார்.

“மத்திய கிழக்கில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வந்து, காஸாவில் போர், துயரம், பசி, பட்டினி ஆகியவற்றை நிறுத்துவதற்கு இரு நாட்டுத் தீர்வே மனித இனத்தின் மிகப் பெரிய நம்பிக்கை,” என திரு. அல்பனீஸ் வலியுறுத்தினார்.

இஸ்ரேல் மீது உலக நாடுகள் காஸா போரை நிறுத்தும் அழுத்தம் அதிகரித்து வருகிறது. இருப்பினும், பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரிப்பது, பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகவே அமையும் என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகியவை பாலஸ்தீனத்தை அதிகாரபூர்வமாக நாடாய் ஏற்றுக்கொண்டன.

Comments