Offline
Menu
ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம்
By Administrator
Published on 08/13/2025 09:00
News

உலகமெங்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ பெரும் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டது. ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி, எக்ஸ் நிறுவனத்தின் குரோக், கூகுளின் ஜெமினி ஏஐ உள்ளிட்டவை ஏஐ சந்தைகளில் முன்னணி வகிக்கின்றன. இந்த நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது அப்டேட்களை ஏஐயில் வெளியிட்டு வருகின்றன.

சந்தையில் முதலிடத்தை பிடிக்க ஒருபக்கம் போட்டி நடக்கும் நிலையில், இதற்காக தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் டெக் ஊழியர்களை தங்கள் நிறுவனங்களுக்கு இழுக்க முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. அந்த வகையில், மெட்டா, குரோக் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்கள் அதிக ஊதியம் கொடுத்து பணியாளர்களை ஈர்த்து வருகின்றன. இதனால், தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைக்க ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனசாக கொடுத்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம். இதனால், ஓபன் ஏஐ நிறுவன ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனனர்.

Comments