கோலாலம்பூர்:
சமீபத்தில் பந்தாய் தாலம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் தொடர் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாஸில் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பில் கடந்த சனிக்கிழமை பிரதமர் பிரிவு அமைச்சர் (மத்திய பகுதி) டாக்டர் ஸாலிஹா முஸ்தபா மற்றும் கோலாலம்பூர் மேயர் டத்தோ ஸ்ரீ மைமுனா மொஹத் ஷரிப் உடன் கலந்துரையாடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 14 குடும்பங்கள் இப்போது Sekolah Rendah Agama Al-Khawarizmi நிவாரணக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர், மேலும் சிலர் அவர்களின் உறவினர்களுடன் தங்கியிருக்கிறார்கள்.
அவர்களுக்கான மீள்குடியேற்ற பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பள்ளியில் கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ள குடும்பங்களுக்கு தேவையான கற்றல் சாதனங்கள் மற்றும் பாடசாலை பொருட்கள் சமூக நலத்துறை மற்றும் மத்திய பகுதி இஸ்லாமிய மத சபையுடன் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் மனிதவள அமைச்சரும் ஸ்டீவன் சிம் கலந்து கொண்டார்.
ஆகஸ்ட் 8-ஆம் தேதி இரவு பந்தாய் தாலம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 குடிசை வீடுகள் மற்றும் 4 கடை வளாகங்கள் அழிந்தன.