Offline
Menu
கல்வி துறையில் 5.14 மில்லியன் மாணவர்களுக்கு Jalur Gemilang Badge வழங்க RM 8.4 மில்லியன் ஒதுக்கீடு
By Administrator
Published on 08/13/2025 09:00
News

கோலாலம்பூர்,

கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஃபார்ம் சிக்ஸ் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (IPG) ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் 5.14 மில்லியன் மாணவர்களுக்கு தேசிய கொடி Badgeஐ வழங்க அரசாங்கம் RM 8.4 மில்லியன் ஒதுக்கியுள்ளது.

ஒவ்வொரு மாணவருக்கும் இரண்டு தேசிய கொடி பேஜ்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஒதுக்கீடு 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனைத்து மாநில கல்வி துறைகளுக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கும் விநியோகிக்கப்பட்டது என அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பேஜ்கள் வழங்கும் பணிகள் மாநில கல்வி துறைகள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து eProcurement முறையின் கீழ் திறந்த தெண்டர்கள் அல்லது மேற்கோள்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விரைவான விநியோகம் மற்றும் தகுதியான பல வழங்குநர்களின் பங்குபற்றல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்த பணியில் மொத்தம் 91 வழங்குநர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் தேசிய கொடியை அணிந்திருந்து நாட்டின் ஒருமித்த பண்பாட்டு மற்றும் தேசிய அடையாளத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Comments