நெகிரி செம்பிலான், சிரம்பான் செனாவாங்கில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே மார்பில் கத்தியால் குத்தப்பட்ட 28 வயது நபர் நேற்று மாலை உயிரிழந்தார். நேற்று மாலை 7 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், 31 வயதான சந்தேக நபருடன் ஏற்பட்ட தவறான புரிதலைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் கத்தியால் குத்தப்பட்டதாக சிரம்பான் காவல்துறைத் தலைவர் ஹட்டா சே டின் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் அறிவித்தார். பொதுமக்களின் உதவியுடன் சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர் அதே நேரத்தில் ஒரு கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது. குத்தியதற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்று ஹட்டா ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சந்தேக நபர் ஆகஸ்ட் 18 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். கொலை குற்றத்திற்கான தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்படுகிறது.