Offline
Menu
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
By Administrator
Published on 08/17/2025 09:00
News

உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்களில் சிலர் காலிஸ்தான் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், போலீசார் தலையிட்டு எந்த மோதலும் இல்லாமல் நிலைமையை தணித்தனர். பின்னர் தூதரக அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments