சிரம்பான், Gunung Angsi Ulu Bendul, Kuala Pilah பகுதியில் இன்று காலை ஒரு பெரிய மரம் சரிந்து விழுந்ததில் 10 கார்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் குறித்து காலை 11.05 மணிக்கு தகவல் கிடைத்ததாக, அங்குள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் மூத்த அதிகாரி II (KUP) நொர்ஹிர்வான் சைனல் தெரிவித்ததாவது கூறினார்.
“இந்த விபத்தில் மூன்று கார்கள் – இரண்டு புரோட்டான் சாகா மற்றும் ஒரு பெரோடுவா அதிவா – நேரடியாக மரம் விழுந்ததில் நசுங்கின. மற்ற ஏழு கார்கள் அருகிலிருந்த மின் கம்பம் இடிந்து, அதன் கம்பிகள் மோதி சேதமடைந்தன,” என்றார் அவர் .
அதே நேரத்தில், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் அவர் உறுதியளித்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, மர பராமரிப்பு குழுக்கள், பயன்பாட்டு குழுக்கள் இணைந்து உடனடியாக சுத்திகரிப்பு பணிகளை மேற்கொண்டன. மின்கம்பிகளை அகற்றும் பணிகளை தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மேற்கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.