கோலாலம்பூர், Op Northern Starஇன் கீழ் எம்பிஐ இன்டர்நேஷனல் குரூப் (எம்பிஐ) சம்பந்தப்பட்ட முதலீட்டு மோசடி திட்டம் தொடர்பான விசாரணைகளுக்காக போலீசார் மேலும் பலரை கைது செய்துள்ளனர். புக்கிட் அமான் பணமோசடி தடுப்பு (AMLA) குற்றவியல் புலனாய்வுக் குழுவின் தலைவர் டத்தோ முகமது ஹஸ்புல்லா அலி, தொடர்பு கொண்டபோது கைதுகளை உறுதிப்படுத்தினார். மேலும் அவர்களில் “டத்தோஸ்ரீ” என்ற பட்டத்தை கொண்ட நபர்கள் அடங்குவர் என்றும் கூறினார்.
இருப்பினும், Op Northern Star சமீபத்திய முடிவுகளின் விவரங்களை விரைவில் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் வெளியிடுவார் என்று அவர் கூறினார். மே 30 அன்று, எம்பிஐ முதலீட்டு மோசடி வழக்கு தொடர்பாக 17 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், RM3.81 பில்லியன் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் முகமது ஹஸ்புல்லா தெரிவித்தார்.
மோசடி முதலீட்டுத் திட்டத்தில் பிரதிநிதிகள் மற்றும் வணிக கூட்டாளிகள் என்று நம்பப்படும் “டான் ஸ்ரீ” மற்றும் “டத்தோஸ்ரீ” பட்டங்களைக் கொண்ட தொழில்முனைவோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்றும் அவர் கூறினார். இந்தக் கைதுகள் கிளாங் பள்ளத்தாக்கு மற்றும் வடக்கு மாநிலங்களில் Op Northern Starஎன்ற பெயரில் நடத்தப்பட்டன.