ஜகார்த்தா:
மத்திய ஜகார்த்தாவின் செனாயான் பகுதியில் கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஆர்ப்பாட்டங்களின் முன்னேற்றங்களை அங்குள்ள மலேசிய தூதரகம் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறது.
தெற்கு மற்றும் மத்திய ஜகார்த்தாவின் பல சாலைகள் மூடப்பட்டதால், போக்குவரத்து மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஜகார்த்தாவில் வசிக்கும் அல்லது வருகை தரும் அனைத்து மலேசிய குடிமக்களும் போராட்டங்கள் நடைபெறும் இடங்களைத் தவிர்க்குமாறும், அதனைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் குறித்து உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஊடகங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்குமாறும் தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
“மலேசியர்கள் ஆர்ப்பாட்டப் பகுதிகளைத் தவிர்த்து, உள்ளூர் விதிமுறைகளை அல்லது சட்டத்தை மீறும் எந்தச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது,” என்று தூதரகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளது.
அத்துடன், உடனடி உதவி தேவைப்படும் சூழ்நிலையில், மலேசிய குடிமக்கள் +62813 8081 3036 என்ற எண்மூலம் நேரடியாக தூதரகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.