Offline
Menu
நான் உயிருடன் இருக்கும் வரை நடக்காது: பாஜகவை எச்சரித்த மம்தா பானர்ஜி
By Administrator
Published on 08/30/2025 09:00
News

கொல்கத்தா:மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது. இதில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துகொண்டு பேசியதாவது:

பா.ஜ.க. நாடு முழுவதும் வங்காளிகள் மீது மொழி பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வருகிறது.

வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் நோக்கில், மேற்கு வங்கத்தில் நாடு முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட குழுக்களை கணக்கெடுப்புகளை நடத்த பாஜ அனுப்பி வைத்துள்ளது.

யாராவது உங்கள் வீட்டிற்கு கணக்கெடுப்புக்காக வந்தால் உங்கள் விவரங்களைத் தர வேண்டாம். அவர்கள் அந்தத் தரவைப் பயன்படுத்தி உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவார்கள். அதற்கு பதிலாக, வாக்குச் சாவடிகளில் நேரடியாகச் சரிபாருங்கள்.

நான் உயிருடன் இருக்கும் வரை மக்களின் வாக்குரிமையை யாரும் பறிக்க விட மாட்டேன் என தெரிவித்தார்.

Comments