Offline
Menu
இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்காக, பாலபேஸ் அதிகாரியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது!
By Administrator
Published on 08/30/2025 09:00
News

கோலாலம்பூர்:

ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், 22 வயது பாலபேஸ் (PALAPES) அதிகாரியான ஸம்சுல் ஹாரிஸ் சம்சுடின் அவர்களின் உடல், இரண்டாவது பிரேதப் பரிசோதனைக்காக, செமினியில் உள்ள காம்போங் ரிஞ்சிங் ஹுலு முஸ்லிம் மையத்துக் கொள்ளை கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது.

அவரது உடல், குடும்பத்தினர், நண்பர்கள், காவல்துறையினரின் பாதுகாப்புடன், கோலாலம்பூர் மருத்துவமனையில் உள்ள, தேசிய தடயவியல் மருத்துவ நிறுவனத்திற்கு (IPFN) மேலதிகப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஜூலை 28-ஆம் தேதி, ஸம்சுல் ஹாரிஸ், ஜோகூர், உலு தீராம், இராணுவப் போர் பயிற்சி மையத்தில் (PULADA) பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தபோது, உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல், மறுநாளே நல்லடக்கம் செய்யப்பட்டது.

முதல் பிரேதப் பரிசோதனை அறிக்கை, தனது மகனின் மரணத்திற்குக் காரணமான காயங்களை விளக்கவில்லை என, அவரது தாயார் உம்மு ஹைமான் (Ummu Haiman) குற்றம் சாட்டினார். மேலும், முதல் பிரேதப் பரிசோதனை, முறையாகச் செய்யப்படவில்லை என்று கூறிய அவர், இரண்டாவது பிரேதப் பரிசோதனை, விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, “ஸம்சுல் ஹாரிஸ்-க்கு நீதி வேண்டும்” என்ற பதாகைகளுடன், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கல்லறையில் ஒன்றுகூடினர்.

இந்தச் சம்பவம், நீதி உண்மை வெளிவர வேண்டும் என்ற அவரது குடும்பத்தின் உறுதியைக் கோரிக்கையை முன் வைக்கிறது.

Comments