கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 610 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
என்று தாலிபன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள சில மாகாணங்களில் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக தாலிபன் அரசு தமது எக்ஸ் தளம் அறிக்கை வழி தெரிவித்துள்ளது.
தற்போது பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்ப்புத் துறைகள் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள மாகாணங்களிலிருந்தும் ஆதரவு குழுக்கள் மீட்ப்புப் பணிக்காக விரைந்துக் கொண்டிருக்கின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.