விமான நிலைய வருகை முனையத்தில் கவனிப்பாரற்று உலோகப் பெட்டி ஒன்று கிடந்ததன் தொடர்பில் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு கண்டறிதல் படை, மோப்ப நாய்களுடன் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் விரைந்தனர் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சுங்க அலுவலகம் அருகே கிடந்த அந்த உலோகப் பெட்டி ஆய்வு செய்யப்பட்டு
பின்னர் மேலும் சோதனைக்காக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த சம்பவத்தினால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பில் இருந்தது.