கோலாலம்பூர்:
சிகரெட், புகையிலை மற்றும் சுருட்டு ஆகியவற்றை, முறைகேடாகக் கடத்தியதாகக் கூறப்படும் 14 நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC), ‘ஓப் சிகாரோ’ (Op Sikaro) என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
இந்த நடவடிக்கையில், MACC அந்த நிறுவனங்களின் RM218 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
இந்த மோசடி கும்பல், வரி ஏய்ப்பதற்காகச் சுங்கத் துறை ஆவணங்களில் போலியான தகவல்களைப் பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர், அந்தப் பொருட்களைத் தனிப்பட்ட கிடங்குகளில் சேமித்து, சட்டவிரோதமாக விநியோகம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.