Offline
Menu
சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (SARA) உதவித் திட்டம்: இரண்டு நாள்களில் RM110 மில்லியன் பரிவர்த்தனை!
By Administrator
Published on 09/03/2025 09:00
News

கோலாலம்பூர்:

சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (Sumbangan Asas Rahmah – SARA) உதவி திட்டத்தின் கீழ், இரண்டு நாள்களில் 1.7 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் , நாடு முழுவதும் RM110 மில்லியன் மதிப்புள்ள கொள்முதல்களைச் செய்துள்ளனர்.

இதனிடையே, நிதி அமைச்சு (MOF) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று இரவு 9.30 மணி வரியிலான நிலவரப்படி, 900,000-க்கும் அதிகமான பயனீட்டாளர்கள் நாடு முழுவதும், RM60 மில்லியன் ரிங் இட் உதவித் தொகையை செலவழித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, நேற்று அதிகாலைப் பரிவர்த்தனைகள் அதிகரித்ததால், மைகாசெ (MyKasih) அமைப்பின் திறன் அதிகரிக்கப்பட்டது.

இதனால், இரண்டாம் நாளில், 20% கூடுதல் பரிவர்த்தனைகளைச் செயல்படுத்த முடிந்தது. இருப்பினும், மதியம் 1 மணி முதல் 2.30 மணி வரை, சில நகர்ப்புறக் கடைகளில், கூட்டம் அலைமோதியது.

Comments