சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் மாபெரும் அளவில் வசூல் வேட்டையாடி சாதனை படைத்தது. உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயனின் கரியர் பெஸ்ட் படமாகியுள்ளது.வருகிற செப்டம்பர் 5ம் தேதி மதராஸி படம் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை நடந்த ப்ரீ புக்கிங்கில் மதராஸி படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி, இதுவரை ப்ரீ புக்கிங்கில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது. ரிலீஸுக்கு முன் எவ்வளவு வசூலை இப்படம் அள்ளப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.