கோலாலம்பூர்:
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இந்தியா, முதற்கட்டமாக, 21 டன் நிவாரணப் பொருட்களை, இன்று விமானம் மூலம் காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பொருட்கள், போர்வை, கூடாரங்கள், சுகாதாரப் பெட்டகங்கள், தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள், ஜெனரேட்டர்கள், சமையலறைப் பொருட்கள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், தூங்கும் பைகள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், கிருமிநாசினி, குடிநீர் சுத்திகரிப்பு மாத்திரைகள், மருத்துவப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.
இந்த உதவி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும் வகையில் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியா, அங்குள்ள நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் மேலும், வரும் நாள்களில், கூடுதலான மனிதாபிமான உதவிகளை அனுப்பும் எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.