கோலாலம்பூர்:
பெஸ்தாரி ஜெயா, புக்கிட் பாடோங் தோட்டத்தில் உள்ள ஒரு கோயிலில், பிரார்த்தனை நடைபெற்றபோது, துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும், 55 வயது ஆடவர் ஒருவர், பெட்டாலிங் ஜெயாவில் காவல்துறையினரால், கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து கோலா சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Supritendant Azaharuddin Tajudin கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, காலை 11.30 மணியளவில், இந்து பக்தர்கள் கோயிலில், தங்கள் வருடாந்திரப் பிரார்த்தனைகளைச் செய்துகொண்டிருந்தபோது, சந்தேக நபர், காற்றில், பலமுறை சுட்டதாகக் கூறப்படுகிறது.
எனவேதான், இந்த சம்பவம் குறித்த விசாரணையை தொடர்ந்து, காவல்துறையினர், நேற்று மாலை, அந்தச் சந்தேக நபரைத் கைது செய்து மேலதிக விசாரணைக்காக செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தடுத்து வைத்துள்ளனர்.
இந்த வழக்கு, 1960-ஆம் ஆண்டு ஆயுதங்கள் சட்டம் பிரிவு 39-இன் கீழ், விசாரிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்தவர்கள், கோலா சிலாங்கூர் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.