Offline
Menu
கோலாலம்பூர், ஜாலான் சுங்கை துவா, உலு யாம் பகுதியில் விபத்து: காவல்துறை அதிகாரி பலி!
By Administrator
Published on 09/04/2025 09:00
News

கோலாலம்பூர்:

இன்று காலை, ஜாலான் சுங்கை துவா, உலு யாம் பகுதியில் நடந்த விபத்தொன்றில், இஸ்தானா நெகாராவின், காவல்துறை மோட்டார் சைக்கிள் அணியின் 32 வயதுடைய அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் Supritendant Ibrahim Husin கூறுகையில்,, பத்தாங் காலியிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் விழுந்த மரத்தைத் தவிர்ப்பதற்காக, அந்த அதிகாரி மோட்டார் சைக்கிளைத் திருப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் வழி சாலைக்குச் சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளாகி உள்ளார்.

விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மருத்துவ அதிகாரிகள், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

எனவே தான், உயிரிழந்த அதிகாரியின் உடல், கோலா குபு பாரு மருத்துவமனையில், உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக, விசாரிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து, ஏதேனும் தகவல் தெரிந்தால், விசாரணை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளுமாறு, காவல்துறை, பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Comments